ads

விஷாலின் 'இரும்புத்திரை' அதிக தொகைக்கு விற்பனை

irumbu thirai movie sold to themeens films

irumbu thirai movie sold to themeens films

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'இரும்புத்திரை'. நடிகர் விஷால் 'துப்பறிவாளன்' படத்தினை தொடர்ந்து தற்போது 'இரும்புத்திரை' படத்திலும், இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்திலும் தீவிரமாக உள்ளார். 'இரும்புத்திரை' படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கிறார். 

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கேரளாவில் விஷாலுக்கு துப்பறிவாளன் மற்றும் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த 'வில்லன்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்ப்பு அதிகமாகவே உள்ளது.  இந்நிலையில் 'இரும்புத்திரை' படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை அதிக தொகைக்கு விலை போகியுள்ளதாக நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் உரிமையை சிபு தமின்ஸ், தமின்ஸ் பிலிம்ஸ் சார்பில் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருக்கும் இந்த படத்தை 2018 பொங்கலுக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

விஷாலின் 'இரும்புத்திரை' அதிக தொகைக்கு விற்பனை