பாகுபலி பிரபாஸின் சாஹு படத்தில் இணைந்த மலையாள நடிகர் லால்

       பதிவு : May 24, 2018 17:45 IST    
துபாயை தொடர்ந்து  மும்பை, ஐதராபாத், ரோமானியா ஐரோப்பா உள்ளிட்ட பல இடங்களில் சாஹு படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் லால் இணைந்துள்ளார். துபாயை தொடர்ந்து மும்பை, ஐதராபாத், ரோமானியா ஐரோப்பா உள்ளிட்ட பல இடங்களில் சாஹு படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் லால் இணைந்துள்ளார்.

பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாஸ் 'சாஹு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனரான சுஜித் தனது 'ரன் ராஜா ரன்' என்ற படத்திற்கு பிறகு இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுக்கு துணை கதாபத்திரத்தில் அருண் விஜய்யும், வில்லன் கதாபாத்திரத்தில் நெய்ல் நித்தினும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஷ்ரத்தா கபூர், எவ்லின் சர்மா, ஜாக்கி ஷ்ரோப் ஆகியோர் இணைந்து நடித்து வரும் நிலையில் தற்போது மலையாள நடிகரான லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

நடிகர், இயக்குனர்,  எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய திறமைகளை கொண்டுள்ள இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட திரை துறையில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'சண்டி வீரன்'. இந்த படத்திற்கு பிறகு தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸின் சாஹு படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

 

இதனை தொடர்ந்து மும்பை, ஐதராபாத், ரோமானியா ஐரோப்பா உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பை நிகழ்த்த உள்ளனர். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டீசர் போன்றவை வெளியானது. ஆனாலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ப்ளேட் ரன்னர் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. மேலும் சுமார் 300 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை யுவி கிரியேஷன் டி சீரிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வம்சி கிருஷ்னா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பளபட்டி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.


பாகுபலி பிரபாஸின் சாஹு படத்தில் இணைந்த மலையாள நடிகர் லால்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்