ads

நடிகை தமன்னா மீது செருப்பு வீச்சி வைரலாகும் வீடியோ

 throws footwear at tamannaah

throws footwear at tamannaah

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை தமன்னா பல வெற்றி படங்களை திரையுலகில் கொடுத்துள்ளார். மேலும் வரலாற்று சார்ந்த படங்களும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்று வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு புதிய நகைக்கடையை திறக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். அப்போது அவரை காண ரசிகர்கள் கூட்டம் கடையின் முன்பு கடல் போன்று திரண்டு இருந்தது. சில ரசிகர்களிடம் தமன்னா செல்ஃபி எடுத்துக்கொண்டு அனைத்து ரசிகர்களையும் பார்வையிட்டார். இந்நிலையில் ரசிகர்கள் கூட்டத்தின் இடையில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் தமன்னா மீது காலணியை (செருப்பு ) எடுத்து வீசியுள்ளார்.      

அவர் வீசிய காலணி (செருப்பு ) தமன்னா மீது படாமல் பக்கத்தில் நின்று கொண்டிருந்த  பாதுகாவலர் அதிகாரி மீது விழுந்தது. இந்நிலையில் தமன்னா ரசிகர்களுக்கிடையில் பெரிதளவும் பதற்றம் நிலவியது. அதன் பின்னர் காவலர்கள் அந்த நபரை பிடித்து விசாரிக்கையில் முஷீராபாத் நகரை சேர்ந்த கரிமுல்லா என்பது தெரியவந்தது. மேலும் விசாரித்ததில் தெலுங்கில் சமீபகாலமாக தமன்னா நடிப்பு சரியில்லாத காரணத்தினால் தான் அவர் மீது காலணியை வீசினேன் என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவதோடு தமன்னா ரசிகர்களுக்கிடையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  

நடிகை தமன்னா மீது செருப்பு வீச்சி வைரலாகும் வீடியோ