ads

ஜனவரி 17-இல் எம்ஜிஆர் படத்தின் டீசர் வெளியீடு

ஜனவரி 17-இல் எம்ஜிஆர் படத்தின் டீசர் வெளியீடு

ஜனவரி 17-இல் எம்ஜிஆர் படத்தின் டீசர் வெளியீடு

எம்ஜிஆர், புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராகவும் பின்பு 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். இவர் தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். 

அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். எம்ஜிஆர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் மற்றும் அரசியல் வாதி என இவரது படைப்புகள் ஏராளம். இவர் உயரிய விருதான 'பாரத்' மற்றும் 'பாரத ரத்னா' விருது போன்ற பலவிருதுகளை பெற்றவர். தற்போது இவரின் திரை அனுபவம் மற்றும் அரசியல் அனுபவம் போன்றவை மைய கருத்தாக வைத்து படமாக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த படத்தில் சதிஷ் குமார் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சதீஷ்குமார் பல தென்னிந்திய படங்கள், பல விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் தற்போது இந்த படத்திற்காக வாள்சண்டை, சிலம்பம், மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை ரமணா கம்யூனிகேஷன் தயாரிக்கிறது. அ.பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் டீசரைஜனவரி 17-இல் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

ஜனவரி 17-இல் எம்ஜிஆர் படத்தின் டீசர் வெளியீடு