ads

மிர்ச்சி சிவா படத்தில் இணைந்த தமிழ் படம் நாயகி

tamil padam 2 point 0 joins disha pandey

tamil padam 2 point 0 joins disha pandey

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'தமிழ் படம்'. இந்த படத்தில் திஷா பாண்டே, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், பொன்னம்பலம், பறவை முனியம்மா உட்பட பல திரையுலக வட்டாரங்கள் இணைந்திருந்தனர். தற்பொழுது இந்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் 'தமிழ் படம் 2.0' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறப்பு பூஜை நடைபெற்று படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. மேலும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா இணைந்துள்ளார்.   

இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் இணைந்துள்ளார். இவருடன் சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், ஜார்ஜ், கலைராணி, அஜய் ரத்னம் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த திஷா பாண்டே முக்கிய வேடத்தில் இணைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் சி.எஸ்.அமுதன் அவர்களது ட்விட்டரில் பதிவு செய்ததோடு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.        

‘Y NOT ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எஸ்.சஷிகாந்த் தயாரித்து வரும் இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாகவே வெளியிட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் வெளியிட உள்ள இப்படத்தினை வருகிற மே மாதம் 25ம் தேதி திரையிடப்படுவதாக படக்குழு முடிவுசெய்துள்ளது.             

மிர்ச்சி சிவா படத்தில் இணைந்த தமிழ் படம் நாயகி