ads

கார்த்தியின் புது படத்தில் முதல் முறையாக இணைந்த பிரபலம்

harris jayaraj joines in karthi new movie

harris jayaraj joines in karthi new movie

நடிகர் கார்த்தி நடிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தமிழக காவல் துறையை கவுரவப்படுத்தும் படமாக அமைந்ததால் ரசிகர்களிடம் இந்த படத்திற்கு பலத்த வரவேற்பு இருந்தது. இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பசங்க,பசங்க 2, கதகளி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை நடிகர் கார்த்தியின் அண்ணனான நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாயிஷா ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் இந்த படம் விவசாயம் சார்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், சூரி, ஸ்ரீமான், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் சித்திரை மாதத்தில் வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அதாவது இந்த படம் கோடை விருந்தாக மே மாதம் வெளிவர உள்ளது. தற்போது இந்த படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி புது முக இயக்குனரான ராஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து ராகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இசையமைக்க இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் முதன் முறையாக கார்த்தி படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஆனால் நடிகர் சூர்யாவின் பல வெற்றி படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

harris jayaraj rakul preet singh joines in karthi new movieharris jayaraj rakul preet singh joines in karthi new movie

கார்த்தியின் புது படத்தில் முதல் முறையாக இணைந்த பிரபலம்