தேசிங்கு ராஜா இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவான இமான்

       பதிவு : Jun 11, 2018 17:54 IST    
இமான் அடுத்ததாக இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமான் அடுத்ததாக இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இமான், தனது தீவிர உடற்பயிற்சியினால் தனது குண்டான உடலை குறைத்து தற்போது ஸ்லிம்மாக்கி உள்ளார். இவரின் ஸ்லிம்மான தோற்றத்திற்கு தற்போது பட வாய்ப்புகளும் வருகிறதாம். அந்த வகையில் தற்போது மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா போன்ற வெற்றி படங்களை இயக்கிய எழில் இயக்கத்தில் இசையமைப்பாளர் இமான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் எழில் தற்போது விஷ்ணு விஷாலை நாயகனாக வைத்து ஜகஜால கில்லாடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு இமானை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இசையமைப்பாளரான இமான், தமிழ் சினிமாவில் 2002இல் வெளியான விஜயின் தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து 16 வருடங்களாக 94 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் சீம ராஜா, கடைக்குட்டி சிங்கம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், விசுவாசம் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

 

இது தவிர கோலங்கள், கல்கி, பந்தம், செல்லமே போன்ற பல சீரியல்களுக்கும் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் பாடகராக இருந்த இமான் தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் எழில் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே எழில் இயக்கத்தில் வெளியான மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துறை, சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் எழில் இயக்கத்தில் இணைந்து ஹீரோவாக களமிறங்கவுள்ளார் இமான்.


தேசிங்கு ராஜா இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவான இமான்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்