ads

யுவன் சங்கர் ராஜா இசையின் சாதனை

yuvan shankar raja 125th film

yuvan shankar raja 125th film

முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா பல வெற்றி படங்களில் இசையமைப்பதோடு பல படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். நாகராஜன் இயக்கத்தில் சரத்குமார், பார்த்திபன், நக்மா, ஊர்வசி, விசு, பிரகாஷ் ராஜ் உள்பட பல திரைப்பட வட்டாரங்கள் இணைந்து 1997ம் ஆண்டில் வெளிவந்த 'அரவிந்தன்' படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா இசையமைபாராளராக திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பின்னர் பூவெல்லாம் கேட்டுப்பார், ரிஷி, தீனா, நந்தா, காதல் கொண்டேன், பேரழகன், ராம், 7 ஜி ரெயின்போ காலனி, சண்டக்கோழி, வல்லவன், திமிரு, பருத்திவீரன், தாமிரபரணி, தீபாவளி, வேல், யாரடி நீ மோகினி, சிலம்பாட்டம், பையா, தீராத விளையாட்டு பிள்ளை, மங்காத்தா, வேட்டை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தங்க மீன்கள், ஆதலால் காதல் செய்வீர், ஆரம்பம் என பல வெற்றி படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வளம் வருகிறார். இவர் 2007ல் வெளிவந்த '7 ஜி ரெயின்போ காலனி' படத்தின் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றிருப்பது குறிப்பிட தக்கது. கடந்த 2013ம் ஆண்டில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பிரியாணி படத்தில் யுவனின் இசை சதவீதம் அடித்தது. 

தற்பொழுது யுவனின் திரையுலக பயணத்தில் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடிப்பில் உருவாகி வரும்  'இரும்புத்திரை' படத்தில் யுவனின் 125வது படத்தின் இசையை எட்டியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது.  

 

யுவன் சங்கர் ராஜா இசையின் சாதனை