ஜிப்ஸி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகும் மாடல் அழகி

       பதிவு : May 29, 2018 17:02 IST    
மும்பையை சேர்ந்த மாடல் அழகி மற்றும் 2015இல் மிஸ் இமாச்சல் பட்டம் வென்ற நடாஷா சிங் ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த மாடல் அழகி மற்றும் 2015இல் மிஸ் இமாச்சல் பட்டம் வென்ற நடாஷா சிங் ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கலகலப்பு 2 படங்களுக்கு பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்ஸி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் காலிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள கீ படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. கொரில்லா படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு ஜீவா, ராஜூமுருகன் இயக்கத்தில் ஜிப்ஸி படத்தில் நடிக்க உள்ளார். இவர் முன்னதாக குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் ராஜூமுருகன், இந்த படத்திற்கு தான் எழுதியுள்ள ஜிப்ஸி என்ற புத்தகத்தின் தலைப்பையே வைத்துள்ளார்.

இந்த படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த தேர்வு நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக மாடல் அழகியான நடாஷா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த மாடல் அழகியான இவர் மிஸ் இமாச்சல பிரதேஷ் என்ற பட்டத்தை வென்றவர். இவர் பாலிவுட் துறைக்கு கடந்த 2010இல் மிஷன் 11 ஜூலை படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு தமிழுக்கு ஜிப்ஸி படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

 

இது குறித்து நடாஷா கூறுகையில் "இந்த படத்தில் சாமானிய குடும்பத்தில் வாழ்ந்து வரும் ஏழ்மையான கூச்ச சுபாவமுடைய பெண் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளேன். இந்த படத்தின் ஹீரோவான ஜீவாவிடம் காதல் கொண்ட பிறகு எனது வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதை மிகவும் அழகாக இயக்குனர் ராஜூமுருகன் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிப்பது எனக்கு பெருமை தான்" என்று அவர் கூறியுள்ளார். குக்கூ படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளது.


ஜிப்ஸி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகும் மாடல் அழகி


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்