ads

நான்காவது முறையாக தலயுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா

viswasam movie heroine nayanthara

viswasam movie heroine nayanthara

நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் 'விசுவாசம்'. இந்த படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படம் தீபாவளியில் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வந்த படக்குழு இந்த படத்தின் நாயகி யார் என்பதை பெரும் ரகசியமாகக் வைத்து வந்தனர். ஆனால் ரசிகர்கள் நாள்தோறும் பல நடிகைகளை தேர்வு செய்து இந்த படத்தில் இவர் இணையவுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர். ஆனால் தற்போது இந்த படத்தில் தல ஜோடியாக நடிப்பதற்கு மீண்டும் நயன்தாரா நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே தல மற்றும் நயன்தாரா ஜோடி பில்லா, ஏகன், ஆரம்பம் போன்ற படங்களில் மாஸ் காட்டியது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையின் முன்னணி நடிகர்கள்  இருவரும் மீண்டும் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பலமாக அதிகப்படுத்தியுள்ளது. அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அறிவழகன் இயக்கும் த்ரில்லர் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ள மூன்றாவது படத்தில் நயன்தாரா தற்போது நடிக்க உள்ளதாக படக்குழு இன்று அறிவித்தது. இதனால் தல மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

நான்காவது முறையாக தலயுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா