நயன்தாராவுக்காக உடல் எடையை குறைக்கும் நிவின் பாலி

       பதிவு : Feb 07, 2018 16:24 IST    
nivin pauly nayanthara new movie love action drama new updates nivin pauly nayanthara new movie love action drama new updates

மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் ஹேய் ஜூடு படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முதன் முறையாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான ஷியாமப்ரசாத் இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் நிவின் பாலி நடிப்பில் 'காயம்குளம் கொச்சுண்ணி' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நிவின் பாலி 1860-ஆம் காலத்தில் வாழ்ந்த கொச்சுண்ணி என்பவரின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் கொச்சுண்ணி மனைவியாக பிரியா ஆனந்த் இணைந்துள்ளார். இந்த படத்தில் முன்னதாக அமலா பால் நடிப்பதாக இருந்தது ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு தேதிகள் ஒதுக்க முடியாததால் அவருக்கு பதிலாக பிரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்காக நிவின் பாலி தனது எடையை அதிகப்படுத்தியுள்ளார்.

 

இதனை அடுத்து நிவின் பாலி அடுத்ததாக நடிக்க உள்ள 'லவ் ஆக்சன் டிராமா' என்ற படத்திற்காக 10 கிலோ வரை எடையை குறைக்க உள்ளார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனரான தயான் ஸ்ரீனிவாசன் இயக்க உள்ளார். இந்த படத்தை நடிகர் அஜூ வர்கீஸ் தயாரிக்க முக்கிய கதாபாத்திரத்திலும் இணைந்துள்ளார்.


நயன்தாராவுக்காக உடல் எடையை குறைக்கும் நிவின் பாலி


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்