ads
இயக்குனர் பா ரஞ்சித்தின் பரியேறும் பெருமாள் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
வேலுசாமி (Author) Published Date : Feb 13, 2018 12:12 ISTபொழுதுபோக்கு
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் 'காலா' படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் ப்ரொடக்சன் சார்பில் 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த நீலம் ப்ரொடக்சன் நிறுவனத்தின் முதல் படமாக உருவாகி வருகிறது.
இதற்கான அறிவிப்பை இயக்குனர் பா ரஞ்சித் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிட்டார். இயக்குனர், எழுத்தாளர் மட்டுமல்லாமல் தற்போது தயாரிப்பாளர் பணியிலும் பா ரஞ்சித் களமிறங்கியுள்ளார். நீலம் ப்ரொடக்சன்சின் முதல் படமாக உருவாகி வரும் இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் பா ரஞ்சித்தின் முன்னால் உதவியாளராக இருந்தவர்.
இந்த படத்தில் மதயானை கூட்டம், கிருமி போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் கதிர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக 'கயல்' ஆனந்தி இணைந்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். மேலும் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்த அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி மற்றும் காலா போன்ற படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தற்போது பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கும் இவர் இசையமைத்து வருகிறார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் ராம், இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் வெளியிடுவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.