பார்ட்டி படத்தின் டீசர் விரைவில்

       பதிவு : Dec 11, 2017 10:40 IST    
party movie teaser party movie teaser

'சென்னை 600028 - II' படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு தற்பொழுது உருவாக்கி வரும் அதிரடி காமெடி படம் பார்ட்டி. இந்த படத்தில் ஜெய், சாம், சிவா, சந்திரன், சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள்  நடிக்கின்றனர்.           

அம்மா கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் டி. சிவா தயாரித்துள்ள இப்பட்டத்தில் பிரேம்ஜி அமரன் இசையமைக்க, ரமேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனித்து கொள்கிறார். மேலும் இப்படத்தினை தொடர்ந்து  'டக்கர்', 'ஆர்கே. நகர், காவியம்' போன்ற படங்களில் பிரேம்ஜி இசையமைத்து வருவது குறிப்பிட்ட தக்கது. பிரவீன் கேஎல் இந்த படத்தில் எடிட்டிக் பணியில் ஈடுபட்டு வருகிறார்.          

 

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் டீசர் மிக விரைவில் வெளிவருவதாக படத்திற்கு இசையமைத்துள்ள பிரேம்ஜி அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.  


பார்ட்டி படத்தின் டீசர் விரைவில்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்