ads

தமிழக மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் ஆர்ஜே பாலாஜி கருத்துக்கு கடும் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக ஆர்ஜே பாலாஜியின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக ஆர்ஜே பாலாஜியின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

நேற்று தூத்துக்குடியில் தமிழக மக்களுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு உலகின் பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து தமிழின மக்களும் கடும் கணடனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவு அளித்த அரசாங்கத்தையும், துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரிகளையும் எதிர்த்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல், ஏஆர் முருகதாஸ், இயக்குனர் சங்கர், ஜிவி பிரகாஷ், விஷால், கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இளைஞர்களுக்காக பல மேடைகளில் குரல் கொடுத்து வரும் நடிகர் ஆர்ஜே பாலாஜியும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் "தூத்துக்குடியில் நேர்ந்த கொடுமை மிகுந்த வருத்தமளிக்கிறது. போராட்டத்தின் போது அப்பாவி மக்களை துப்பாக்கி சூட்டில் கொன்றது அவமானம். நமக்காக போராடிய அவர்கள் உயிரை விட்டுள்ளனர். ஆனால் இந்த அமைதியான போராட்டத்தில் சில கலக காரர்களால் வன்முறையாக மாறியுள்ளது." என்று அவர் பதிவு செய்துள்ளார். இவரின் கருத்து ஆறுதலாக இருந்தாலும் நம் மக்களின் உயிரை பறித்த தமிழக அரசை எதிர்த்து பதிவு செய்யாதது வருத்தமளித்துள்ளது. இதனால் ஏராளமானோர் இவரின் கருத்தை எதிர்த்து பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் ஆர்ஜே பாலாஜி கருத்துக்கு கடும் எதிர்ப்பு