ads
பிரபாசுக்கு வருகிற மனைவி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
விக்னேஷ் (Author) Published Date : Dec 15, 2017 16:50 ISTபொழுதுபோக்கு
தெலுங்கு திரையுலகில் பல படங்களை நடித்து முன்னனி நடிகர்களின் ஒருவரான பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படத்திலையே மாபெரும் வெற்றியை பெற்றார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு வட்டாரத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளவதாகவும், மணமகள் பாகுபலி நாயகி அனுஷ்கா இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவந்தது. இந்த தகவலை இவர்கள் இருவரும் மறுத்துவிட்டனர்.
இதனை அடுத்து பிரபாஸ் இயக்குனர் சுஜித் இயக்கத்தில் 'சாஹோ' என்ற அதிரடி த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபாஸ் தனது வருங்கால மனைவியை பற்றிய சில தகவலை ஒரு பேட்டியில் வெளியிட்டுள்ளார். அதில் நான் திருமணத்தை பற்றி எந்த முடிவையும் இன்றுவரை எடுக்கவில்லை. எனக்கு வருகிற மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. செயற்கை குணம் இல்லாமல் நல்ல குணம் கொண்ட பெண் இருந்ததால் உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். 'அப்ப உங்களுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது' என்று கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.