ads
மீண்டும் சிவகாமியாக உருவெடுக்கும் ரம்யா கிருஷ்ணன்
விக்னேஷ் (Author) Published Date : Nov 17, 2017 14:20 ISTபொழுதுபோக்கு
பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி அம்மையாராக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் இப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றி பாராட்டினை பெற்றிருந்தார். இரண்டு பாகத்திலும் நடிப்பில் கவர்ந்ததோடு அவரின் வசனங்களும் பேசப்படும் அளவிற்கு வரவேற்கப்பட்டது. மேலும் இப்படத்தின் மூலம் நந்தி விருதினை பெற்றிருந்தார் என்பது குறிப்பிட்ட தக்கது.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கவிருக்கும் மலையாள திரைப்படத்தில் மீண்டும் சிவகாமியாக உருவெடுக்க உள்ளார். 9ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சிவகாமி ராணியின் வாழ்க்கை வரலாற்றினை எடுக்கவுள்ள படத்தில் ராணி சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார்.
பிரவீன், பாயில் அவினாஷ், ரவி காளி, ரோலர் ரகு மற்றும் பலர் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. மது இயக்கும் இப்படத்தில் வீர் சமத் இசை, பாலா ரெட்டி ஒளிப்பதிவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்படத்தினை அடுத்த வருடம் வெளியிட இருக்கின்றனர்.