ads
தன்னுடைய உதவியாளர் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் பிரபு தேவா
விக்னேஷ் (Author) Published Date : Jun 12, 2018 11:32 ISTபொழுதுபோக்கு
நடிகர் பிரபு தேவா நடிப்பில் 'மெர்குரி' படத்திற்கு பிறகு சார்லி சாப்ளின் 2, லட்சுமி, யங் மங் சங், காமாஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு தற்போது இயக்குனர் ஏசி முகில் இயக்கத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபு தேவா காவல் துறை அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு நிவேதா பெத்துராஜ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் ஏசி முகில் முன்னதாக நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான 'கண்டேன்' படத்தை இயக்கியவர்.
இந்த படத்திற்கு பிறகு பிரபு தேவாவை வைத்து இயக்க உள்ளார். இது தவிர இவர் பிரபு தேவாவின் உதவி இயக்குனராக அவருடன் இணைந்து ரவுடி ரத்தோர், வஷ்டவய, ஆக்சன் ஜாக்சன் போன்ற பல படங்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது இவர்களது கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.
இது குறித்து இயக்குனர் ஏசி முகில் கூறுகையில் "இந்த படம் ஆக்சன் கலந்த பொழுதுபோக்கு படம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளது. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த படம் ஒரு முக்கியமான சமூக கருத்தினை பதிவு செய்யும். பிரபு தேவாவுக்காக 8 மாதங்களுக்கு முன்னரே இந்த படத்தின் கதையை எழுதி முடித்து விட்டேன். இதன் பிறகு பிரபு தேவா காவல் அதிகாரியாக நடிப்பதற்கு உடற்பயிற்சியுடன் தயாராகி வந்தார்.
இந்த படத்தில் நடிக்க வேறு எந்த ஹீரோவும் என் மனதில் தோன்றவில்லை. அவர் நடித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என தோன்றியது. இவர் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். நான் அவருடன் இணைந்து பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். தற்போது மீண்டும் அவருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.