ads

பிரபு தேவா சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் தபாங் 3

நடிகர் மற்றும் இயக்குனரான பிரபு தேவா தற்போது சல்மான் கானை வைத்து புது படம் ஒன்றை இயக்க உள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான பிரபு தேவா தற்போது சல்மான் கானை வைத்து புது படம் ஒன்றை இயக்க உள்ளார்.

நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனரான பிரபு தேவா நடிப்பில் தற்போது யங் மங் சங், மெர்குரி, லக்ஷ்மி, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சைலன்ட் த்ரில்லராக உருவாகியுள்ள மெர்குரி படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிரபு தேவா தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகரான மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராக தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் 13 படங்களை இயக்கியுள்ளார்.

இவருடைய இயக்கத்தில் இறுதியாக இந்தியில் சிங் இஸ் பிளிங் என்ற படம் வெளியானது. தமிழில் இவர் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இவருடைய இயக்கத்தில் 'தபாங் 3' படம் உருவாகவுள்ளது. இந்த படம் தபாங் படத்தின் மூன்றாம் பாகமாக உருவாக உள்ளது. அதிரடி படமான இந்த படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் நாயகையாக நடிகை சோனாக்சி சின்ஹா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்க உள்ளார். சமீபத்தில் இதற்கான தகவல்கள் வலைத்தளங்களில் வெளியாகி வந்த நிலையில் தற்போது பிரபு தேவா இதற்கான அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

பிரபு தேவா சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் தபாங் 3