இயக்குனர் பா விஜயின் ஆருத்ரா டீசரை வெளியிடும் மெர்சல் தயாரிப்பாளர்

       பதிவு : Apr 28, 2018 14:51 IST    
ஸ்டராபெரி படத்தை தொடர்ந்து பா விஜய் ஆருத்ரா என்ற படத்தை இயக்கி நடித்தும் வருகிறார். தற்போது இந்த படத்தின் டீசரை தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி வெளியிட உள்ளார். ஸ்டராபெரி படத்தை தொடர்ந்து பா விஜய் ஆருத்ரா என்ற படத்தை இயக்கி நடித்தும் வருகிறார். தற்போது இந்த படத்தின் டீசரை தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி வெளியிட உள்ளார்.

தமிழ் திரையுலகில் பாடலாசிரியர், கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகர் போன்ற திறமைகளை கொண்டிருப்பவர் பா விஜய். இவர் ஒரு பாடலாசிரியராக 1996-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 90 படங்களுக்கு மேல் பாடல் வரிகளை அமைத்துள்ளார். படங்களை தவிர கல்கி, செல்வி, வாணி ராணி, செல்லமே, அரசி உள்ளிட்ட பல சீரியல்களிலும் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். பாடலாசிரியரான இவர் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் எழுத்தாளராகவும் கடந்த 2009-இல் வெளியான 'ஞாபகங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் கலைஞரின் கைவண்ணத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான 'இளைஞன்' படம் மக்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனராகவும் 'ஸ்டராபெரி' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக 'ஆருத்ரா' என்ற படத்தை இயக்கி நடித்தும் வருகிறார். இந்த படத்தில் பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன் மாடலிங் மங்கை தக்ஷிதா, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ, விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, அபிசேக் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

 

முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதன் பிறகு இந்த படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி வெளியிட உள்ளார். மேலும் வில் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள த்ரில்லர் படமான இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் திரையரங்கு உரிமையை கைப்பற்றியுள்ளது.


இயக்குனர் பா விஜயின் ஆருத்ரா டீசரை வெளியிடும் மெர்சல் தயாரிப்பாளர்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்