ads

அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் தெலுங்கு பதிப்பில் வில்லனுக்கு குரல் கொடுக்கும் ராணா

நாளை வெளியாகவுள்ள அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் தெலுங்கு பதிப்பில் தானோஸ் கதாபாத்திரத்திற்கு ராணா குரல் கொடுக்கவுள்ளார்.

நாளை வெளியாகவுள்ள அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் தெலுங்கு பதிப்பில் தானோஸ் கதாபாத்திரத்திற்கு ராணா குரல் கொடுக்கவுள்ளார்.

உலகம் முழுவதும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். இதனால் ஒரு நடிகருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகின்றனர். அந்த வரிசையில் மார்வெல் ஸ்டுடியோஸின் தயாரிப்பில் வெளிவந்த சூப்பர் ஹீரோ படங்கள் உலகம் முழுவதும் வெளியாகிறது. முன்னதாக மார்வல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான ப்ளாக் பாந்தர் (Black Panther) படம் உலகம் முழுவதும் வசூல் சாதனையை படைத்தது வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் 'அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் (Avengers: Infinity War)' படம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் சமீபத்தில் தொடங்கியது. மார்வல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் ஒரே படத்தில் இணைத்துள்ளனர். இந்த படம் 'அவென்ஜர்ஸ் (Avengers)' வரிசையில் மூன்றாம் பாகமாக வெளியாகிறது. மேலும் இந்த படம் மார்வல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள 19வது படமாகும்.

இந்த படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதில் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்த படத்தில் வில்லனான 'தானோஸ்' கதாபாத்திரத்திற்கு நடிகர் ராணா டகுபதி குரல் கொடுக்க உள்ளார். இவருடைய நடிப்பில் வெளியான சரித்திர படமான பாகுபலி, பாகுபலி 2 படத்தில் வில்லன் கதாபாத்திரம் உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது. இதனால் தற்போது தெலுங்கில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ராணா குரல் கொடுக்க உள்ளார். மேலும் தற்போது இந்த படத்தின் தெலுங்கு டீசரும் வெளியாகியுள்ளது.

அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் தெலுங்கு பதிப்பில் வில்லனுக்கு குரல் கொடுக்கும் ராணா