ads
தமிழக போராட்டங்கள் மற்றும் கடையடைப்பு காரணமாக மெர்குரி ட்ரைலர் தள்ளிவைப்பு
வேலுசாமி (Author) Published Date : Apr 05, 2018 15:08 ISTபொழுதுபோக்கு
தமிழகம் முழுவதும் அரசியல் காட்சிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் போராட்டம் போன்றவற்றால் போராட்டங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த போராட்டங்களால் ஆங்காங்கே சாலை மாறியல்கள், ரயில் மறியல்கள் போன்றவையும் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று திமுக சார்பில் தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டமும் நிலவி வருகிறது. இதற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு தமிழரின் உரிமைக்காக இந்த போராட்டங்கள் நிலவி வருகிறது. இந்த போராட்டத்தில் சிறு சிறு குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இவருடைய இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ள படம் 'மெர்குரி'.
சைலன்ட் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகனாக பிரபு தேவா நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலரை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் கடையடைப்பு போன்றவை நிகழும் போது 'மெர்குரி' படத்தின் ட்ரைலர் வெளியிடுவதை தள்ளிவைப்பதாக கார்த்திக் சுப்பராஜ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் "தற்போது தமிழகத்தில் நிலவி வரும் போராட்டங்கள் மற்றும் கடையடைப்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக இன்று வெளியாகவிருந்த மெர்குரி படத்தின் ட்ரைலர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சைலன்ட் படமாக இருந்தாலும் உலகம் முழுவதும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தை வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் இந்த படத்தின் ட்ரைலர் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
Trailer release of #MERCURY postponed.. pic.twitter.com/x3Z9iA8Fnl
— karthik subbaraj (@karthiksubbaraj) April 5, 2018