ads

நிவின் பாலியின் ரிச்சி -இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

richie movie audio launch

richie movie audio launch

மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது  புது முக இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் ரவுடி கெட்டப்பில்  நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பஸ்ட் லுக், ட்ரைலர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.   

ஆனந்த் குமார், வினோத் சொர்னர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, இவருடன் இணைந்து நடராஜன் சுப்ரமணியன், அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் லட்சுமி பிரியா, ஜிகே ரெட்டி, அஷ்வின் குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு பலர் நடிக்கின்றனர்.   

'காஸ்ட் என் கிரேவ்' நிறுவனம் தயாரித்த இப்படத்தினை வருகிற டிசம்பர் மாதம் 8ம் தேதி வெளியிட இருப்பதால் படத்தின் மற்ற வேலைகளை விறுவிறுப்பாக நடித்தி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் இசையை நாளை வெளியிடுவதாக படக்குழுவினர் அதிகார பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். மேலும் விக்ரம் வேதா, அவள், அறம் போன்ற படங்களை வெளியிட்ட ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் ரிச்சி படத்தினையும் வெளியிட  இருப்பது குறிப்பிட்ட தக்கது. 

   

நிவின் பாலியின் ரிச்சி -இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு