டிசம்பரில் வெளியாகும் திரைப்படங்கள்

       பதிவு : Nov 20, 2017 20:35 IST    
december 2017 release tamil movie december 2017 release tamil movie

இயக்குனர் அருணபிரபு மற்றும் புருஷோத்தமன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'அருவி'. இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.ப்ரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நாயகியாக பிந்து மாலினி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிந்து மாலினி, வேதந்த் பரத்வாஜ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரிச்சி'. இந்த படத்தை கேஸ்ட் இன் க்ரூ சார்பில் ஆனந்த் குமார், வினோத் சொர்னுர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் லட்சுமி பிரியா, ஜிகே ரெட்டி, அஷ்வின் குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு இவர்களுடன் இணைந்து நடராஜன் சுப்ரமணியன், அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 8-இல் வெளிவரவுள்ளது.

 

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வேலைக்காரன்'. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை 24 ஏஎம் சார்பில் ஆர்.டி ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த மாதம் டிசம்பர் 22-இல் வெளிவர இருக்கிறது.

இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'பலூன்'. இந்த படத்தை 70 எம்எம் என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் பிளான் ப்ரொடக்சன் சார்பில் திலிப் சுப்பாராயன், அருண் பாலாஜி, நந்தகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம் டிசம்பர் 29-இல் வெளிவர இருக்கிறது.

 

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'குப்பத்து ராஜா'. இந்த படத்தை எஸ் போகஸ் நிறுவனம் சார்பில் சரவணன் மற்றும் சிராஜ் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் நாயகனான ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பார்த்திபன், பளக் லால்வானி, பூனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் டிசம்பரில் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


டிசம்பரில் வெளியாகும் திரைப்படங்கள்


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்