ads
வேலைக்காரன் பிரியாவிடை நாள் கொண்டாட்டம்
விக்னேஷ் (Author) Published Date : Nov 16, 2017 16:40 ISTMovie News
வளர்ந்து வரும் வாலிப சங்க தலைவர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருவரும் முதல் முதலாக இணைந்து நடித்த வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. தனி ஒருவன் படத்தினை இயக்கிய மோகன் ராஜா 'வேலைக்காரன்' படத்தினை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா படங்கள் என்றாலே வரவேற்புகள் அதிகளவு இருக்கும் நிலையில், அனிருத் இசையில் வெளிவந்த 'இறைவா' பாடலின் மூலம் இன்னும் ரசிகர்களிடம் அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் இப்படத்தில் சினேகா, ரோகிணி, ஆர்ஜே. பாலாஜி, தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ், சதிஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆரமித்து இந்த ஆண்டில் முடிவடைந்ததை தொடர்ந்து வேலைக்காரன் படத்தில் பணிபுரிந்த அனைவரையும் கவுரவிக்கும் விதமாக நாளை பேர்வெல் டே நடைபெறவுள்ளது.இந்த அதிகார பூர்வ அறிவிப்பை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டரின் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
adsவேலைக்காரன் பிரியாவிடை நாள் கொண்டாட்டம்
Related News
ads