ads

நடிகர் பிரேம்ஜி பிறந்த நாளில் ஆர்கே நகர் படத்தின் இரண்டாவது சிங்கிள்

RK Nagar Movie Adiye Second Single Released At Actor Music Director Premgi Amaran Birth Day

RK Nagar Movie Adiye Second Single Released At Actor Music Director Premgi Amaran Birth Day

நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெட்ரா படம் 'மேயாத மான்'. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் வைபவ் 'RK நகர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடிகை சனா அல்தாப் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஒளிப்பதிவாளரான சரவண ராஜன் இயக்கி வருகிறார். இவருடைய இயக்கத்தில் கடந்த ஆண்டு 2014 இல் 'வடகறி' படம் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியானது. இதனை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் இரண்டாவது படமாக 'RK நகர்' உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு நடிகர் மற்றும் இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரன் இசையமைத்து வருகிறார்.

இவருடைய பிறந்த நாளான இன்று இந்த படத்தில் இடம்பெறும் 'அடியே' என்று தொடங்கும் பாடலின் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளிவந்துள்ளது. காமெடி நடிகரான பிரேம்ஜி அமரன் இசையில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'பார்ட்டி' படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்து வருகிறார். இவருடைய இசையமைப்பில் டக்கர்,  காவியன் போன்ற படங்கள் அடுத்ததாக உருவாக உள்ளது.

இயக்குனர் சரவண ராஜன் எழுதி இயக்கி வரும் இந்த படத்தை ப்ளேக் டிக்கெட் கம்பெனி மற்றும் ஷ்ரத்தா என்டர்டெய்ன்மெண்ட் போன்ற நிறுவனங்கள் சார்பில் பத்ரி கஸ்தூரி, வி ராஜலட்சுமி (இயக்குனர் வெங்கட் பிரபு மனைவி) ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். முன்னதாக இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் போன்றவை வெளியானது. விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசையை படக்குழு வெளியிட உள்ளது. இந்த படம் வரும் ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

நடிகர் பிரேம்ஜி பிறந்த நாளில் ஆர்கே நகர் படத்தின் இரண்டாவது சிங்கிள்