ads

விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் இடம்பெறும் ராக்ஸ்டார் ரமணியம்மாவின் பாடல்

பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் ராக்ஸ்டார் ரமணி அம்மாவின் குரல் தற்போது தமிழ் திரைத்துறையில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் ராக்ஸ்டார் ரமணி அம்மாவின் குரல் தற்போது தமிழ் திரைத்துறையில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

ராக்ஸ்டார் ரமணி அம்மா, இவருடைய குரலுக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் மூலம் மிக பிரபலமானவர். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் பல பாடல்களை பாடியுள்ளார். நடிகர் ஜீவா, பரத், விஜய் ஆண்டனி ஆகியோரது படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது இந்நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களின் மனதை தனது இனிமையான குரலால் கவர்ந்து வருகிறார். இவரின் குரலை இசையமைப்பாளர்கள் பலர் தங்களது பாடங்களில் ராக்ஸ்டார் ரமணி அம்மாவை பாட வைப்பதாக தெரிவித்துள்ளனர். சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்டிப்பாக என்னுடைய படத்தில் பாட வைப்பதாக உறுதியளித்தார்.

இவரை தொடர்ந்து இசையமைப்பாளர் டி இமான் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தாயின் பெருமையை சொல்லும் ஒரு பாடலை பாடி அவரை கண்கலங்க வைத்துவிட்டார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் 'ஜூங்கா' படத்திலும் தன்னுடைய குரலை பதிவு செய்துள்ளாராம்.

இப்படி பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கும் ராக்ஸ்டார் ரமணி அம்மாவின் குரலுக்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக இருந்து வருகிறது. ரமணி அம்மாள் பாடியுள்ள 'ஜூங்கா' படத்தின் பாடல் வெளியான பிறகு அவர் இன்னும் பிரபலமாவார் என திரை வட்டாரங்கள் நம்பிக்கை அளித்துள்ளது.

விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் இடம்பெறும் ராக்ஸ்டார் ரமணியம்மாவின் பாடல்