ads

விநாயகர் சதுர்த்தியில் சமந்தாவின் இரு படங்கள் வெளியீடு

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சீம ராஜா படம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாக உள்ள நிலையில் யூடர்ன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சீம ராஜா படம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாக உள்ள நிலையில் யூடர்ன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் இரும்புத்திரை, ரங்கஸ்தலம், நடிகையர் திலகம் என மூன்று படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இது தவிர இவருடைய நடிப்பில் அடுத்ததாக சீம ராஜா, சூப்பர் டீலக்ஸ் மற்றும் யூடர்ன் போன்ற படங்களும் வெளியாக உள்ளன.

இதில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சீம ராஜா' படத்தின் வெளியீடு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் 'யூடர்ன்' படத்தின் வெளியீடு தேதியையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சீம ராஜா படமும் யூடர்ன் படமும் செப்டம்பர் 13இல் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகவுள்ளது.

நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து தொடர்ந்து வருகிறார். இதனால் முன்னதாக வெளியான மூன்று படங்களுமே வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக ஒரே தேதியில் சமந்தாவின் இரு படங்கள் வெளியாகவுள்ளது. கடந்த 2016இல் இந்தியில் வெளியான 'யூடர்ன்' படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர்ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

நடிகையர் திலகம் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சமந்தா பத்திரிகை நிருபராக நடித்துள்ளார். பெண்ணாக இருந்தாலும் குற்றங்களை எதிர்க்கும் தைரியமான கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். இவருடன் இணைந்து ராகுல் ரவீந்திரன், ஆதி, நரேன், பூமிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

விநாயகர் சதுர்த்தியில் சமந்தாவின் இரு படங்கள் வெளியீடு