ads

சந்தானம் ஹாரர் படத்தின் இரண்டாம் பாகம்

santhanam next dhilliku dhuddu 2

santhanam next dhilliku dhuddu 2

தமிழ் திரையுலகின் காமெடி நடிகரான சந்தானம் தற்பொழுது சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நாயகனாக நடித்து வெளிவந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் ‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த  காமெடி கலந்த ஹாரர் படமான 'தில்லுக்கு துட்டு' படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் ரீதியிலும் வெகுவான வரவேற்பு கிடைந்திருந்தது. இந்த காரணத்தினால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது.      

முதல் பாகத்தை இயக்கிய 'லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். மேலும் நாயகனாக நடிக்கவுள்ள சந்தானம் அவருக்கு சொந்தமான 'ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவரே படத்தினையும் தயாரிக்கவுள்ளார். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற பிப்ரவரி 19ம் தேதி முதல் துவங்க உள்ளனர். மேலும் இப்படத்தின் டைட்டிலை 'தில்லுக்கு துட்டு 2' என்று படக்குழு வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இரண்டாவது முறையாக இவர்களது கூட்டணியில் உருவாவிற்கும் இப்படத்தில் நாயகிக்கான தேர்வு தற்பொழுது நடைபெற்று வருகிறதாம். மிக விரைவில் படத்தில் இணையவிருக்கும் இதர நடிகர் - நடிகைகள், கலைக்கஞர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.      

சந்தானம் ஹாரர் படத்தின் இரண்டாம் பாகம்