தில்லுக்கு துட்டு 2 படப்பிடிப்பை துவங்கிய சந்தானம்

       பதிவு : Mar 01, 2018 16:56 IST    
லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை இன்று ஐதராபாத்தில் துவங்கியுள்ளார், Image Credit - Twitter (@iamsanthanam) லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை இன்று ஐதராபாத்தில் துவங்கியுள்ளார், Image Credit - Twitter (@iamsanthanam)

நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016-இல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'தில்லுக்கு துட்டு'. இந்த படத்தில் சந்தானம் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ராம்பாலா, நடிகர் சந்தானம் முன்னதாக நடித்த 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் இயக்குனர் ஆவார்.

இவர்களது கூட்டணியில் 'தில்லுக்கு துட்டு' படம் உருவாகி நல்ல வசூலை பெற்று தந்தது. கலகலப்பான சூழலில் த்ரில்லர் கதையாக உருவான இந்த படம் ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை தந்தது. இந்த படத்தில் நடிகர் சந்தானம், மொட்ட ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், கருணாஸ் ஆகியோரது காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்தது.

 

இந்த படத்தின் வெற்றியை அடுத்து சமீபத்தில் 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்தது. இதன் பிறகு இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர் நடிகைகள் குறித்த தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.

ஐதராபாத்தில் இந்த படத்தின் நீண்ட நாள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. முதல் பாகத்தில் நாயகியாக நடித்த அஞ்சல் சிங் இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்க பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக தற்போது தீப்தி என்ற புதுமுகம் இந்த படத்தின் நாயகியாக நடிக்க உள்ளார். 

 


தில்லுக்கு துட்டு 2 படப்பிடிப்பை துவங்கிய சந்தானம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்