ads
சீம ராஜா டீசர் இசை வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
விக்னேஷ் (Author) Published Date : Jul 21, 2018 09:58 ISTபொழுதுபோக்கு
வேலைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சீம ராஜா'. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
இவர்களுடன் இணைந்து சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இது தவிர நடிகர் மற்றும் இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தில் பிரதம மந்திரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க கமர்சியல் என்டர்டெய்ன்மெண்ட் படமான இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள SK13, SK14 படங்களையும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி இந்த படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதியில் மதுரையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மேலும் வரும் ஜூலை 25ஆம் தேதியில் இந்த படத்தின் 'வாரேன் வாரேன் சீம ராஜா' என்ற பாடலின் சிங்கிள் டிராக்கையும் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.