ads

நகுலின் 'செய்' - இசை, ட்ரைலர் ரிலீஸ்

sei movie audio launch

sei movie audio launch

பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நகுல் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து புது முக இயக்குனர் ராஜ் பாபு இயக்கத்தில் துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் 'ட்ரிப்பி டர்டில் புரொட்க்‌ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் மன்னு என்பவர் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமான 'செய்' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.   

பாலிவுட் நடிகை ஏஞ்சல் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக தூங்காநகரம், சிகரம் தொடு போன்ற படங்களிள் பணிபுரிந்த விஜய் உலகநாதன் இப்படத்திலும் ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ளார். இவருடன் இணைந்து நிக்ஸ் லோபஸ் இசை அமைத்துள்ளார்.  

படத்தின் படபிடுப்புகள் முடிவடைந்த இந்நிலையில் போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு இணைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நகுலின் 'செய்' - இசை, ட்ரைலர் ரிலீஸ்