ads

சிவாவின் தமிழ்ப்படம் 2.0 படத்தின் பெயர் அதிரடி மாற்றம் காரணம் இது தான்

மிர்ச்சி சிவா நடிப்பில் இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் தமிழ் படம் 2.0 படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிர்ச்சி சிவா நடிப்பில் இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் தமிழ் படம் 2.0 படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'தமிழ் படம் 2.0'. இவருடைய இரண்டாவது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த  படத்தை ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்த அறிவிப்பில் "எங்களுடைய தமிழ் படம் 2.0 தலைப்பில் 0 என்ற எண்ணிற்கு மதிப்பு என்பது இல்லை, ஆகையால் அதனை தவிர்த்து எங்களுடைய டைட்டிலை 'தமிழ் படம் 2' என்று மாற்றப்பட்டுள்ளது" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக  ஐஸ்வர்யா மேனன் நடித்து வரும் இந்த படத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் டீசருக்கு இந்த படத்தின் டீசர் மற்றும் புகைப்படம் போன்றவற்றை படக்குழு வெளியீட்டு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை பார்த்த பிறகு சஷிகாந்த்தின் நிலைமை குறித்து இயக்குனர் சிஎஸ் அமுதன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பை மாற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு டீசருக்கு பிறகு பலமாக அதிகரித்துள்ளது. 

சிவாவின் தமிழ்ப்படம் 2.0 படத்தின் பெயர் அதிரடி மாற்றம் காரணம் இது தான்