ads

சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து நடிக்கும் ரெட்டை கொம்பு படப்பிடிப்பு

பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கத்தில் தற்போது சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ரெட்டை கொம்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கத்தில் தற்போது சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ரெட்டை கொம்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரோஜா கூட்டம், டிஷ்யூம், 555 போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2016இல் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் 'பிச்சைக்காரன்'. அம்மா பாசத்தை பெற்ற பிள்ளைகளுக்கு உணர்த்தும் விதமாக வெளியான இந்த படத்திற்கு அமோக வரவேற்புகள் இருந்தது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் சசி தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை ஏற்கனவே தெரிவித்திருந்தார்.இதன்படி இந்த படத்தில் நாயகர்களாக சித்தார்த், ஜிவி பிரகாஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர்களான இருவரும் இந்த படத்தின் மூலம் முதன் முறையாக இணைகின்றனர். இருவரும் இணைந்து இந்த படத்தில் ஒரே குடும்பத்தில் மாமன், மச்சானாக நடிக்க உள்ளனர்.இது தவிர இந்த படத்தில் நடிகர் சித்தார்த் டிராபிக் போலீஸாகவும், ஜிவி பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு 'ரெட்டை கொம்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில் தற்போது அபிஷேக் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.பிச்சைக்காரன் படத்தை போன்று இந்த படத்திலும் பாசம், கோவம், காமெடி போன்ற அனைத்தும் இடம்பெறவுள்ளது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், நடிகராக மட்டுமல்லாமல் படத்தின் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார். விரைவில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது.

சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து நடிக்கும் ரெட்டை கொம்பு படப்பிடிப்பு