ads

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

sivakarthikeyan seema raja first look poster released his birthday

sivakarthikeyan seema raja first look poster released his birthday

இன்று நடிகர் சிவகார்த்திகேயனின் 32வது பிறந்த நாள். இவரின் பிறந்த நாளையொட்டி ஏராளமான ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் பரிசாக, இவர் தற்போது நடித்து வரும் 'சீமராஜா' படத்தின் தலைப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக மோகன் ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பொன்ராம் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்தில் நடிகை சமந்தா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர்களுடன் காமெடி நடிகர் சூரி, சிம்ரன், நெப்போலியன், லால், மனோபாலா, யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 14வது படத்தை இயக்குனர் ஆர்டி ராஜா எழுதி இயக்குகிறார்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தையும், இயக்குனர் பொன்ராமின் 'சீமராஜா' படத்தையும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் 'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து தயாரித்து வருகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் 13வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்க உள்ளார்.

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் 'சீமராஜா' படத்திற்கு இசையமைத்து வருகிறார். தயாரிப்பாளர் ஆர்டி ராஜா தயாரித்து வரும் இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

seema raja movie first look posterseema raja movie first look poster

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்