ads

அஜித்தின் 58வது படத்தில் விஜய் பட பிரபலம்

anal arasu team up with ajith 58

anal arasu team up with ajith 58

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து நடிக்கவிருக்கும் படம் விசுவாசம். வீரம், வேதாளம், விவேகம் படத்தின் வெற்றிகளை தொடந்து நான்காவது முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இறுதி கட்ட க்ரிப்ட் பணியில் பிசியாக ஈடுபட்டு வரும் இயக்குனர் சிவா இந்த படத்தில் இணையவுள்ள இதர நடிகர் -நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வின்  மீதும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டன்ட் (சண்டை பயிற்சி) இயக்குனராக அனல் அரசுவை தேர்வு செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

மேலும் இவர் கருப்பசாமி குத்தகைதாரர், வந்தே மாதரம்,  தெனாவட்டு, சிங்கம் I &II, நான் மகான் அல்ல, ரௌத்திரம், வேலாயுதம், வெடி, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பட்டது யானை, ஜில்லா, கத்தி, தடையற தாக்கா, ஐ, ரெமோ, பாண்டிய நாடு, பைரவா, சிவலிங்கா, வேலையில்லா பட்டதாரி 2, மெர்சல், வேலைக்காரன் போன்ற பல வெற்றி படங்களில் அதிரடி சண்டை காட்சிகளை வடிவமைக்க ஸ்டென்ட் மாஸ்டராக பணிபுரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.     

சிறந்த ஸ்டென்ட் ஒருங்கிணைப்பாளர் விருதினை கருப்பசாமி குத்தகைதாரர் மற்றும் வந்தே மாதரம் படத்தின் மூலம் முதல் முறையாக பெற்றிருந்தார். அதன் பின்னர் நான் மகான் அல்ல - ஆனந்த விகடன் மற்றும் விஜய் விருது, ரௌத்திரம் - ஆனந்த விகடன், தடையற தாக்கா - சிறந்த சண்டை இயக்குனர் ஆனந்த விகடன் மற்றும் விஜய் விருது, பாண்டிய நாடு -  விஜய் விருது, கத்தி - சர்வதேச சிறந்த சண்டை பயிற்சி வீரர் போன்ற பல படங்களின் மூலம் அதிகளவு விருதினை பெற்றுள்ளார்.    

அஜித்தின் 58வது படத்தில் விஜய் பட பிரபலம்