ads

சுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

kalakalappu 2 movie release worldwide at february 9th

kalakalappu 2 movie release worldwide at february 9th

இயக்குனர் சுந்தர்சி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள காமெடி படம் 'கலகலப்பு 2'. இந்த படத்தினை சுந்தர் சி அவரது அவ்னி சினி மேக்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தில்  ஜீவா,ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா,சதீஸ், யோகி பாபு, ரோபோ சங்கர், சிங்கம் புலி, வையாபுரி, ராதாரவி, மிர்ச்சி சிவா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை நந்திதா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி அதன் பின்னர் காசி, இந்தூர், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது.

 இந்த படத்தில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, செந்தில் குமார் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்ததை தொடர்ந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக வெளிவந்த இந்த படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசையை விரைவில் வெளியிட உள்ளனர். முழுக்க காமெடி கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கை வாரியம் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியை நடிகை குஷ்பூ தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படம் அடுத்த மாதம் பிப்ரவரி 9-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

சுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு