ads

கபாலி சாதனையை முறியடிக்குமா காலா டீசர்

Super Star Rajinikanth new movie Kaala official teaser released on march 1st

Super Star Rajinikanth new movie Kaala official teaser released on march 1st

சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காலா'. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இதனை அடுத்து இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் சாமீபத்தில் இந்த படத்தின் டீசர் மார்ச் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை அடுத்த மாதம் மார்ச் 1-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் 'இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!!' என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்த படத்தின் சண்டை காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளிவரவுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் முன்னதாக வெளிவந்த 'கபாலி' படத்தின் டீசர் வெளியான 22 மணி நேரங்களில் உலகம் முழுவதும் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது.

தற்போது வரை இந்த சாதனையை 'காலா' படத்தின் டீசர் முறியடிக்கும் என ரசிகர்கள் தரப்பில் பலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த '2.0' படத்தை தயாரித்துள்ள லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. 'காலா' படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்துள்ளது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

கபாலி சாதனையை முறியடிக்குமா காலா டீசர்