சூர்யா 36 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதி அறிவிப்பு

       பதிவு : Feb 27, 2018 17:30 IST    
Suriya 36 Movie First Look Poster Release Date Announced Suriya 36 Movie First Look Poster Release Date Announced

நடிகர் சூர்யா, 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் இணைந்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதியை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

 

அதன்படி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த மாதம் மார்ச் மாதத்தில் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். சூர்யாவின் 36வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் அறிமுக பாடல் சிறப்பாக அமைந்துள்ளதாக சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார். இதனை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அமைய உள்ளது.

Actor Suriya New Movie First Look Poster Released on March 5th, Image Credit - Twitter (@DreamWarriorpic)Actor Suriya New Movie First Look Poster Released on March 5th, Image Credit - Twitter (@DreamWarriorpic)

சூர்யா 36 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதி அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்