நெருக்கடியில் தல அஜித்தின் விஸ்வாசம் படக்குழு

       பதிவு : Apr 24, 2018 15:48 IST    
தயாரிப்பாளர் பிரச்சனைக்கு பிறகு மீண்டும் விசுவாசம் படப்பிடிப்பு அடுத்த மாதம் மே 5இல் படக்குழு துவங்கவுள்ளது. தயாரிப்பாளர் பிரச்சனைக்கு பிறகு மீண்டும் விசுவாசம் படப்பிடிப்பு அடுத்த மாதம் மே 5இல் படக்குழு துவங்கவுள்ளது.

நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்து உருவாக்கி வரும் படம் 'விஸ்வாசம்'. இந்த படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் டைட்டில் அறிவித்த பிறகு இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர்களின் அறிவிப்புகள் குறித்து படக்குழு அவ்வப்போது தெரிவித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பில்லா, ஏகன், ஆரம்பம் போன்ற படங்களுக்கு பிறகு நயன்தாரா நான்காவது முறையாக இணைந்துள்ளார்.

இவர்களுடன் நடிகர் ரோபோ சங்கர், தம்பி ராமையா, யோகி பாபு போன்ற காமெடி நடிகர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். தயாரிப்பாளர் வேலை நிறுத்தத்திற்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி நகரில் மாபெரும் செட்டை அமைத்திருந்தது. இந்த படப்பிடிற்காக இயக்குனர் சிவா இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்களுடன் கால் சீட் பெற்றிருந்தார். ஆனால் திடீரென அறிவிக்கப்பட்ட தயாரிப்பாளர் பிரச்சனையில் இந்த படத்தின் படபிடிப்பு நடத்த முடியாமல் போனது.

 

தற்போது தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் முடிவடைந்த நிலையில் வருகின்ற மே மாதம் 5-ஆம் தேதியில் ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இந்த படம் இந்த ஆண்டின் தீபாவளிக்கு வெளிவருவதால் தல தீபாவளியாக கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதற்கிடையில் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆறு மாதத்திற்குள் இந்த படப்பிடிப்பு முழுவதும் நிறைவு செய்யும் கட்டாயத்தில் உள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப படப்பிடிப்பு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடைந்தால் உண்மையில் இந்த ஆண்டு தல ரசிகர்களுக்கு தல தீபாவளி தான். ஆனால் படப்பிடிப்பு தாமதமானால் இந்த படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.


நெருக்கடியில் தல அஜித்தின் விஸ்வாசம் படக்குழு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்