ads
கலகலப்பு 2 இசை வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
விக்னேஷ் (Author) Published Date : Dec 30, 2017 17:59 ISTபொழுதுபோக்கு
'அரண்மனை 2' த்ரில்லர் படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி படம் 'கலகலப்பு 2'. இந்த படத்தினை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர்.சி தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஜீவா,ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, மிர்ச்சி சிவா, மனோபாலா, சதீஸ், யோகி பாபு, ரோபோ சங்கர், சிங்கம் புலி, வையாபுரி, ராதாரவி உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை நந்திதா கெஸ்ட் ரோலில் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 4ம் தேதி காரைக்குடியில் துவங்கி அதன் பின்னர் காசி, இந்தூர், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றது. தற்பொழுது படத்தின் அனைத்து வித படப்பிடிப்பும் முடிவடைந்து படக்குழு சில நாட்களுக்கு முன்பு பிரியாவிடையை கொண்டாடியது.
இந்த படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, UK.செந்தில் குமார் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டிருந்தார். தற்பொழுது படத்தின் படப்பிடிப்பை முடித்ததை தொடர்ந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படக்குழு வெளியிட்ட படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்த படியாக இசையை விரைவில் வெளியிட உள்ளனர். தற்போது, படத்தின் ஆடியோ இசை டீசர் உரிமையை பிரபல நிறுவனமான ‘திங்க் மியூசிக்’ கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.