ads

பலூன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய ஜீ தமிழ்

balloon movie television rights

balloon movie television rights

ஜெய் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள த்ரில்லர் படம் பலூன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி, ஜனனி அய்யர் என இரு நாயகிகள் இணைந்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசரில் ஜெய் புது வித கெட்டப்பில் ரசிகர்களை பயத்தில் மிரள வைக்கும் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியுள்ளார். மேலும் ’70 MM எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிடவுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சரவணன் ஒளிப்பதிவு, ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பு பணியில் இணைந்துள்ளனர். இந்த படம் வரும் 29-ஆம் தேதி வெளிவரவுள்ளது. ஆரா சினிமாஸ் இந்த படத்தின் திரையரங்கு உரிமையை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலை கொடுத்து ஜீ தமிழ் வாங்கியுள்ளது.

பலூன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய ஜீ தமிழ்