ads

4 நாட்களில் 100 கோடியை தாண்டிய 'டைகர் சிண்டா ஹே'

tiger zinda hai movie

tiger zinda hai movie

ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகர்களின் ஒருவர் சல்மான் கான் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான இவர் பல படங்களில் 100 கோடி வசூல் சாதனைகளை புரிந்துள்ளார். இதனை தொடர்ந்து ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்பொழுது தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் 2017ம் ஆண்டின் டாப் 10 கோடீஸ்வர்களில் முதலிடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.      

இந்நிலையில் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதி திரைக்கு வந்த 'டைகர் ஜிந்தா ஹை' படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் இணைந்திருந்தார். இந்த படம் வெளிவந்த 4 நாட்களிலே ரூ 34.10 கோடி, ரூ 35.30 கோடி, ரூ 45.53 கோடி, 36.54 கோடி என படத்தின் ஓவ்வொரு நாள் வசூலின் முடிவிலும் பல கோடி ரூபாயை வசூலித்து வருகிறது. இந்த படம் வெளிவந்த 4 நாட்களில் ரூ 151.47 கோடியை கடந்திருப்பது குறிப்பிட்ட தக்கது. சல்மானின் பல படங்கள் 100கோடி வசூலில் இடம் பெற்றிருந்த இந்நிலையில் 'டைகர் ஜிந்தா ஹை' படம் 12வது இடத்தை பிடித்து 100கோடி வசூல் சாதனையில் இணைந்துள்ளது.   

4 நாட்களில் 100 கோடியை தாண்டிய 'டைகர் சிண்டா ஹே'