'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் டாப்10 கோடீஸ்வர பிரபலங்கள்

       பதிவு : Dec 22, 2017 19:35 IST    
forbes top celebrity revenue earnings forbes top celebrity revenue earnings

'போர்ப்ஸ்' பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இந்திய பிரபலங்களில் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிடுகிறது. தற்போது இந்த ஆண்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் நடிகர் ஷாருக் கான் முதல் இடத்தில் இருந்தார். 2017 ஆம் ஆண்டுக்கான கோடீஸ்வரர்களில்  நடிகர் சல்மான் கான் நடிகர் ஷாருக் கானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். நடிகர் சல்மான் கான் விளம்பரங்கள் மற்றும் படங்களின் மூலம் 1-10-2016 ஆம் தேதி முதல் 30-09-2017 தேதி வரை 232 கோடியே 83 லட்சம் ரூபாய் சம்பாதித்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில நடிகர் ஷாருக் கான் 170.05 கோடி வருவாயில் உள்ளார். 

அடுத்ததாக மூன்றாவது இடத்தில் கிரிக்கெட் வீரர் கோஹ்லி 100.72 கோடி சம்பாத்தியத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக நடிகர் அக்ஷய் குமார் 98.25 கோடி வருவாயில் நான்காவது இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 82.5 கோடி வருவாயில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில நடிகர் ஆமிர் கான் 68.75 கோடி சம்பாதித்து ஆறாவது இடத்தில் உள்ளார். மேலும் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 68 கோடி வருவாயில் ஏழாவது இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி 63.77 கோடி வருவாயில் எட்டாவது இடத்தில் உள்ளார். அடுத்தபடியாக நடிகர் ரித்திக் ரோஷன் 63.12 சம்பாதித்து ஒன்பதாவது இடத்தில உள்ளார். பத்தாவது இடத்தில் 62.63 கோடி வருவாயில் நடிகர் ரன்வீர் சிங் உள்ளார்.

 

salman khan forbes celebrity listsalman khan forbes celebrity list

'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் டாப்10 கோடீஸ்வர பிரபலங்கள்


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்