ads

நாளை வெளியாகவுள்ள நிமிர் படத்தின் ஸ்னீக் பிக்

nimir movie sneak peek released

nimir movie sneak peek released

இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நாளை (ஜனவரி 26) குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ட்ரைலர், இசை போன்றவை வெளிவந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ஒரு காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் மலையாளத்தில் நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற படத்தின் ரிமேக்காக உருவாகியுள்ளது. ஆனால் இயக்குனர் பிரியதர்சன் இந்த படம் மலையாள படத்தை தழுவியதல்ல, அதில் உள்ள கருத்தை மட்டும் எடுத்து தமிழ் ரசிகர்கள் விரும்பும்படி கதை அமைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் மலையாள ரிமேக் படத்தில் நடிக்க போவதாக கடந்த 2017 இல் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனி வசனம் அமைத்துள்ளார். சமுத்திரக்கனி வசனம் என்றாலே ரசிகர்களை பொங்கி எழ வைத்து விடுவார் அந்த அளவிற்கு அவருடைய வசனம் அழுத்தமாக இருக்கும். இந்த படத்தில் வசனம் அமைத்தது மட்டுமில்லாமல் முக்கிய கதாபத்திரத்திலும் இணைந்துள்ளார். நடிகர் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் செல்வம் கதாபத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான நமீதா பிரமோத் மலர் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு தமிழில் அறிமுகமாகும் முதல் படமாகும்.

மேலும் 2010 ஆம் ஆண்டில் 'மிஸ் கர்நாடகா (Miss Karnataka)', 'மிஸ் நேவி குயின் (Miss Navy Queen)' போன்ற விருதுகளை வென்ற பிரபல மாடல் அழகியான பார்வதி நாயர் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் காதலியாக வள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் மற்றும் இயக்குனரான மகேந்திரன் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தை கதாபத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு 'நிமிர்' என்று தலைப்பு வைத்தது இவரே ஆவார். மேலும் நடிகர் எம் எஸ் பாஸ்கர் இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழுத்தமான துணை கதாபத்திரமாக நடிக்க இவருடன் காமெடி நடிகர் கருணாகரன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தென்காசியில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில காட்சிகள் மட்டும் நடிகை பார்வதி நாயரின் சொந்த நகரமான துபாயில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் கவிஞர் வைரமுத்து, மோகன்ராஜ், தாமராஜ் ஆகியோரது வரிகளில் இசையமைப்பாளர் தர்புக சிவா, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளனர். வழக்கமாக தமிழ் படங்களில் ஹீரோ வில்லனை அடிப்பது, வில்லன் ஹீரோவை பழிவாங்குவது, பறந்து பறந்து சண்டை போடுவது இவை இல்லமால், சாதாரணமாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டதாக ரசிகர்களுக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை வெளியாகவுள்ள நிமிர் படத்தின் ஸ்னீக் பிக்