ads

சங்கரின் இந்தியன் 2 படத்தில் இணைந்த நயன்தாரா வடிவேலு

nayanthara vadivelu in indian 2 movie

nayanthara vadivelu in indian 2 movie

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது '2.0' படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் 450 கோடி பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிஜி வேலைகள் நிறைய இருப்பதால் டீசர் வெளியாக தாமதமாகிறது என்று இயக்குனர் சங்கர் சமீபத்தில் தெரிவித்தார். இதனை அடுத்து இயக்குனர் சங்கரின் அடுத்த பிரமாண்ட படைப்பு 'இந்தியன் 2'. இயக்குனர் சங்கர் எப்போதும் ஒரு படம் எடுத்தாலும் அதனை இரண்டாம் பாகத்தில் எடுக்க ஆசைப்படுபவர்.

அதன்படி தற்போது 1996-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ள நடிகர் கமல் ஹாசனுக்கு இந்த படம் நிச்சயம் பக்க பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படம் புரமோஷனுக்காக இயக்குனர் சங்கர் தைவான் நாட்டில் ஒரு பலூனை பறக்க விட்டு அதற்கான வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த படத்தில் நாயகன் கமல் ஹாசன் இந்தியாவின் ஊழலையும், ஒழுக்கக்கேடுகளையும் எதிர்க்கும் கதாபத்திரத்தில் நடிக்க உள்ளார். தற்போது உள்ள அரசியல் சூழல் அவருக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. நயன்தாரா சம்மதித்தால் கமல் ஹாசன் நயன்தாரா இணையும் முதல் படம் 'இந்தியன் 2'. மேலும் இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ள நடிகர் வடிவேலு இந்த படத்தில் நடிக்க ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் உள்ளனர். விரைவில் படக்குழு இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கரின் இந்தியன் 2 படத்தில் இணைந்த நயன்தாரா வடிவேலு