ads
மாரி 2 படத்தில் இணையும் வரலட்சுமி
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 29, 2017 10:30 ISTபொழுதுபோக்கு
கெளதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை' போன்ற படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் இதனை தொடர்ந்து 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கிவரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மற்ற நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், கலை கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வரும் இந்நிலையில் இசையமைக்கும் பணியில் யுவன் சங்கர் ராஜா 10 வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் தனுஷுடன் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார்.
மேலும் படத்தின் படப்பிடிப்புகள் குறித்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் இரண்டாவது நாயகியாக வரலட்சுமி சரத்குமார் இப்படத்தின் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். மேலும் இவருடன் இணைத்து கிருஷ்ணா, டோவினோ தாமஸ் நடிக்கவுள்ளனர். மாரி படத்தில் ராக்கர்ஸ் அனிருத் இசையமைத்த பாடல்கள் பட்டி தொட்டி அளவிற்கு வெகுவாக வரவேற்கப்பட்டது. மேலும் இப்படத்தில் தனுஷின் 'செஞ்சிருவே' டைலாக்ஸ் அனைவராலும் கவரப்பட்டு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாரி 2 படத்தின் இசை, வசனம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும், தனுஷின் பிறந்தநாளாறு படத்தினை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.