ads
'வேலைக்காரன்' படத்திற்கு யு சான்றிதழ்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 09, 2017 09:40 ISTபொழுதுபோக்கு
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வேலைக்காரன்'. இந்த படத்தினை மோகன் ராஜா இயக்கியுள்ளார். முதன் முறையாக சிவாவுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பகத் ஃபாஸில், சினேகா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சதிஷ், ரோபோ சங்கர், ஆர்கே.பாலாஜி, தம்பி ராமையா, விஜய் வசந்த் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இதன் காரணத்தினால் ரசிகர்களுக்கிடையில் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது. இந்நிலையில் படத்திற்கு யு .ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக இயக்குனர் மோகன் ராஜா அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
24ஏ.எம்.ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆர்டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவையும், ரூபன் எடிட்டிங் பணியையும் செய்துள்ளார். இப்படம் வருகிற 22ம் தேதி உலகமெங்கும் திரையிட படுகிறது.