சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் புது படத்தின் பர்ஸ்ட் லுக்

       பதிவு : Nov 22, 2017 16:51 IST    
sivakarthikeyan new movie sivakarthikeyan new movie

இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வேலைக்காரன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை 24 ஏஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் டிசம்பர் 22-இல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

இதனை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன் ராம் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சமந்தா, சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இமான் இசையமைப்பில் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதத்திற்கும் மேல் முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-இல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 


சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் புது படத்தின் பர்ஸ்ட் லுக்


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்