ads

வேலைக்காரன் படத்தினை வெளியிடும் பிரபல தயாரிப்பு நிறுவனம்

thenandal films ditribute velaikaran movie

thenandal films ditribute velaikaran movie

சிவகார்த்திகேயன், நயன்தாரா முதல் முதலாக இணைந்து நடித்த 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் மற்ற வேலைகளை படக்குழுவினர் விறுவிறுப்பாக பார்த்து வருகின்றனர். தனி ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

ரெமோ படத்தினை தயாரித்த ‘24 Am Studios’ நிறுவனம் வேலைக்காரன் படத்தினையும் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், தம்பி ராமையா, விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பாஹத் பாசில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.   

  வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு படத்தினை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் படத்தின் விநியோகங்களும் அதிகளவு சூடுபிடித்து உள்ளது. முதலில் பிரபல SPI Cinema நிறுவனம் சென்னையில் விநியோகம் செய்வதற்கு உரிமையை கைப்பற்றியிருந்தது. தற்பொழுது வந்த தகவலில் புகழ் பெற்ற 'ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' மெர்சல் வெற்றியை தொடர்ந்து வேலைக்காரன் படத்தின் விநியோகத்திலும் களமிறங்கி உள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் செங்கல்பட்டு ஏரியாவில் விநியோகம் செய்யும் உரிமையை வாங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது.        

வேலைக்காரன் படத்தினை வெளியிடும் பிரபல தயாரிப்பு நிறுவனம்