ads

விஜய் தேவரகொண்டாவின் நோட்டா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஆனந்த் சங்கர், 2014இல் வெளியான 'அரிமா நம்பி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் முன்னதாக இந்தியில் 'அஞ்சான அஞ்சானி' படத்தில் இயக்குனர் சித்தார்த் அனந்துடனும், தமிழில் இயக்குனர் ஏஆர் முருகதாஸுடன் துப்பாக்கி, 7ஆம் அறிவு போன்ற படங்கள் இணை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

இவருடைய முதல் படமாக 'அரிமா நம்பி' விக்ரம் பிரபு நடிப்பில் வெளியானது. இதனை அடுத்து இவர் இயக்கத்தில் வெளியான 'இருமுகன்' படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாகவும், நாயகனாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கு 'நோட்டா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேஇ ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார். இந்த படம் இவருடைய தயாரிப்பில் வெளியாகவுள்ள 14வது படமாகும். தற்போது இந்த படத்தின் போஸ்டரை ஆனந்த் சங்கர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த படம் உண்மையான சம்பவத்தின் மூலம் எடுக்கப்பட்டது அல்ல என்றும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார். இந்த படத்திற்கு 'நோட்டா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'நோட்டா' என்பது தேர்தலில் மக்கள் ஓட்டுபோடும்போது வேட்பாளர்கள் பிடிக்க வில்லை எனில் மக்கள் பயன்படுத்தும் முறையாகும்.

தற்போதுள்ள சூழலில் தேர்தலில் நோட்டாவின் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் நிலையும் கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல் போன்றவைகளால் மோசமாகி கொண்டே செல்கிறது. இதனை எடுத்துரைக்கும் படமாக விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' படம் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. இந்த படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் இவர் அரசியல் வாதியாக நடிக்க உள்ளார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் நோட்டா பர்ஸ்ட் லுக் போஸ்டர், Photo Credit - @anandshank (Twitter)தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் நோட்டா பர்ஸ்ட் லுக் போஸ்டர், Photo Credit - @anandshank (Twitter)

விஜய் தேவரகொண்டாவின் நோட்டா பர்ஸ்ட் லுக் போஸ்டர்